உள்ளூர் செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசிய காட்சி.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரியில் உள்ஒதுக்கீடு-அ.தி.-மு.க. தீர்மானம்

Published On 2022-01-10 14:10 IST   |   Update On 2022-01-10 14:10:00 IST
அரசு பள்ளி மாணவர்களுக்கு -மருத்துவ கல்லூரியில் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளை கொண்டாடுவது குறித்து கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன்  தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாநில ஜெ.பேரவை செயலாளர் பாஸ்கர், மாநில இணைச் செயலாளர் அன்பானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

எம்.ஜி.ஆரின் 105--வது பிறந்த நாளை முன்னிட்டு புதுவை கிழக்கு மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒவ்வொரு தொகுதி வாரியாக உள்ள ஏழை-எளிய மக்களுக்கு, இலவச வேட்டி, சேலை, தட்டு வண்டி, தள்ளுவண்டி, சலவைப்பெட்டி மாணவர் களுக்கு பாட புத்தகங்கள், அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவி களை வழங்கி சிறப்பாக கொண்டாடுவது.

நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் தற்பொழுது அகில இந்திய மருத்துவம் சார்ந்த கல்வி இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் வழங்க வேண்டும் என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று தீர்பபு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை புதுவை அ.தி.மு.க. வரவேற்கிறது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய உள் ஒதுக்கீடு போன்று புதுவையிலும் அரசு பள்ளி யில் பயிலும் மாணவர் களுக்கு மருத்துவ கல்வியில் உரிய உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராம், இணை செயலாளர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், துணை செயலாளர்கள் கீர்த்தி, உமாமூர்த்தி, மணவாளன், ஸ்ரீதர், அமுதன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Similar News