உள்ளூர் செய்திகள்
ஆம்பூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

முக கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது

Published On 2022-01-10 08:38 GMT   |   Update On 2022-01-10 08:38 GMT
அரக்கோணத்தில் முக கவசம் அணியாதவர்களுக்கு பொருட்கள் வழங்க கூடாது என வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்:

அரக்கோணம் நகர பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தலைமையிலான  வருவாய் அலுவலர்கள் ஜெயபால், கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்திக், முகமது இலியாஸ் மற்றும் அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

 கடைகாரர்களிடம் முக கவசம் அணியாமலும், சமுக இடைவெளி பின்பற்றி வராதவர்களுக்கு பொருட்களை தர கூடாது   அரசு தெரிவித்துள்ள கொரோனா விதிமுறைகள் மீறி கூட்டம் கூடியிருந்தால் அபராதம் விதிக்கப்படும் என தாசில்தார் பழனிராஜன் தெரிவித்தார். 

இதனை  தொடர்ந்து  ராணிபேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்தியன் நேற்று அரக்கோணம் பழைய பஸ் நிலையம் அருகே ஆய்வு செய்தார். அப்போது அந்த பகுதியில்  கடைகள் ஏதேனும் திறக்கப்பட்டுள்ளனவா என டிரோன் மூலம் ஆய்வு செய்தார். 

அரக்கோணம் நகர பகுதிகளில் உள்ள சாலை முழுவதும் நகராட்சி பணியாளர்கள் முழுவதுமாக சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News