உள்ளூர் செய்திகள்
மரணம்

கடலூரில் குடியிருப்பு பகுதியில் இறந்து கிடந்த முதியவர்

Published On 2022-01-09 17:25 IST   |   Update On 2022-01-09 17:25:00 IST
கடலூரில் குடியிருப்பு பகுதியில் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் வெளிச்செம்மண்டலம் ராஜீவ்காந்தி நகரில் நேற்று மாலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இறந்து கிடந்த முதியவரின் உடலை பார்வையிட்டு அப்பகுதி மக்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த முதியவர், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் சுற்றித்திரிந்து, பொதுமக்களிடம் உணவு வாங்கி சாப்பிட்டு வந்ததும் தெரியவந்தது. ஆனால் அவர் யார்? என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதையடுத்து போலீசார் அந்த முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடியிருப்பு பகுதியில் இறந்து கிடந்த முதியவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Similar News