உள்ளூர் செய்திகள்
திட்டக்குடியில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு

திட்டக்குடியில் முழு ஊரடங்கு கடைபிடிப்பு

Published On 2022-01-09 16:25 IST   |   Update On 2022-01-09 16:25:00 IST
திட்டக்குடியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து வணிகர்களும் கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் பார்சல் சர்வீஸ் மட்டும் செய்து வருகின்றனர்.
திட்டக்குடி:

கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) முழு ஊரடங்கு தமிழகம் பிறப்பிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் முழு ஊரடங்கின் போது உணவு விடுதிகள் மற்றும் சிற்றுண்டிகள் தங்களது சொந்த வாகனத்தில் வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி திட்டக்குடியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் அனைத்து வணிகர்களும் கடைகள் மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் பார்சல் சர்வீஸ் மட்டும் செய்து வருகின்றனர். போக்குவரத்து முற்றிலும் முடங்கியது, திட்டக்குடி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. திட்டக்குடி போலீசார் ஊரடங்கு உத்தரவை மீறி வரும் வாகனங்களை தடுத்து அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Similar News