உள்ளூர் செய்திகள்
கபடி போட்டியை வி.பி.ராமலிங்கம்எம்.எல்.ஏ. பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

புதுவை மாநில பா.ஜனதா சார்பில் மாநில அளவிலான கபடி போட்டி

Published On 2022-01-09 14:24 IST   |   Update On 2022-01-09 14:24:00 IST
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் தொடங்கிய கபடி போட்டியை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா சார்பில்   தொடங்கிய கபடி போட்டியை வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுவை பா.ஜனதா சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுவையில் இதுவரை கண்டிராத வகையில் மாநில அளவிலான மாபெரும் கபடி போட்டி புதுவை பா.ஜனதா சார்பில் நடத்தப்படுகிறது. லாஸ்பேட்டை தாகூர் கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில்   தொடங்கிய கபடி போட்டியை சப்தகிரி வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. பூஜை செய்து தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், விவியன் ரிச்சர்ட், சிவசங்கரன் மற்றும் புதுவை கபடி சங்க நிர்வாகிகள் ஆரியசாமி, சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் புதுவையை சேர்ந்த பல்வேறு அணிகள் பங்கேற்றன. போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ-.3 லட்சமும், 2-வது பரிசாக ரூ.1.5 லட்சமும், 3-வது பரிசாக ரூ-.1 லட்சமும் வழங்கப்படுகிறது.  
கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் அணிவகுப்பு ஊர்வலம் கருவடிக்குப்பம் சிவாஜி சிலையிலிருந்து தொடங்குகிறது. 

 அங்கிருந்து ஊர்வலம் போட்டி நடைபெறும் லாஸ்பேட்டை தாகூர்கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தை சென்றடைகிறது. அதன் பின்னர் பரிசளிப்பு விழா நடக்கிறது.

Similar News