உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

இரு மடங்காக உயர்ந்தது புதுவையில் 444 பேருக்கு கொரோனா

Update: 2022-01-09 08:47 GMT
புதுவை மாநிலத்தில் நேற்று 3202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி:

 புதுவை மாநிலத்தில்  3202 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் புதுவையில் 350 பேர், காரைக்காலில் 84 பேர், ஏனாமில் ஒருவர், மாகியில் 9 பேர் என மொத்தம்  444 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தற்போது 100 பேர் மருத்துவமனைகளிலும், 1150 பேர் வீட்டு தனிமையிலும் என மொத்தம், 1250 பேர் சிகிச்சையில் உள்ளனர்.  ஜிப்மர் மருத்துவமனையில் 46 பேரும், அரசு மார்பக மருத்துவமனையில் 28 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 19 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.  உயிரிழப்பு  ஏதும் இல்லை. புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரத்து 722 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 

இதில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 590 பேர் தொற்றில் இருந்து குண மடைந்துள்ளனர். 1882 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
புதுவையில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்கள் தொற்று பெருமளவில் குறைந்து ஒற்றை இலக்கத்தை எட்டியது. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளது. 
8-ந் தேதி 280 ஆக இருந்த கொரேனா  இரு மடங்காக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News