உள்ளூர் செய்திகள்
பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை
காவேரிப்பாக்கம் அருகே செல்போன் பார்த்ததை பாட்டி கண்டித்ததால் பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த பாகவெளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 75).இவரது மனைவி ஆயம்மாள். இவர்களின் பேத்தி ஆனந்தி (16).
வாலாஜா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்து வந்தார். இவரின் பெற்றோர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டனர்.
இதனால் தாத்தா செல்வராஜ் பாட்டி ஆயம்மாள் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். சம்பவத்தன்று ஆனந்தி நீண்ட நேரமாக செல்போன் பார்த்தாக கூறப்படுகிறது.
இதனை கண்ட ஆயம்மாள் அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த மாணவி வீட்டில் உள்ள பூச்சி மருந்தை குடித்து விட்டு மயக்கம் அடைந்தார்.
மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து செல்வராஜ் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகின்றனர்.