உள்ளூர் செய்திகள்
காரைக்கால் திருநள்ளாறு சாலையில் தனியார் பஸ் மோதி, பாய் வியாபாரி உடல் நசுங்கி பலி
காரைக்கால் திருநள்ளாறு சாலையில், வழிகரை அம்மன் கோவில் அருகே, நேற்று காலை, தனியார் பஸ் மோதி, பாய் வியாபாரி முகமது அலி, அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார்.
காரைக்கால்:
காரைக்கால் திருநள்ளாறு சாலையில், வழிகரை அம்மன் கோவில் அருகே, நேற்று காலை, தனியார் பஸ் மோதி, பாய் வியாபாரி முகமது அலி, அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். அவருடன் சென்ற 6 வயது சிறுவன் படுகாயம் காயம் அடைந்து சிகிச்சைபெற்று வருகிறார்.
காரைக்காலை அடுத்த திருநள்ளாறு பிடாரி கோவில் தெருவைச்சேர்ந்தவர் முகமது அலி(வயது55). பாய் வியாபாரம் செய்து வரும் இவர், தனது பேரன் பகத் அகமதுவை(6), காரைக்கால் தருமபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் விடுவதற்காக, டிவிஎஸ் மோட்டார்சைக்கிளில் அழைத்துசென்றார். திருநள்ளாறு வழிகரை அம்மன் கோவில் அருகே மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி சென்றபோது, பின்னால் வேகமாக வந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், முகமது அலி சாலையில் தூக்கியெறியப்பட்டு, அவர் மீது பஸ் சக்ரம் ஏறியதில், முகமது அலி அதே இடத்தில் உடல் நசுங்கி பலியானார். சிறுவன் பகத் அகமது சாலையோரம் தூக்கியெறியப்பட்டு படுகாயம் அடைந்தான். தொடர்ந்து, காரைக்கால் போக்குவரத்து காவல்நிலைய சப்.இன்ஸ்பெக்டர் தனபால், துணை சப்.இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார், சம்வ இடத்திற்கு சென்று, சிறுவனை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். முகமது அலி உடலை கைபற்றி, காரைக்கால் அரசு மருத்துவமனை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய, பஸ் டிரைவர் காரைக்கால் விழிதியூர் தெற்குத்தெருவைச்சேர்ந்த கலைச்செல்வனை(27) போலீசார் கைது செய்தனர்.