உள்ளூர் செய்திகள்
அரசு உத்தரவை மதிக்காமல் கடலூர் துறைமுகத்தில் திரண்ட பொதுமக்கள்
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு மட்டும் கொரோனா இருந்து வந்த நிலையில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது.
கடலூர்:
தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான், கொரோனா தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்த வெள்ளி, சனி, ஞாயிறு வழிபாட்டுத்தலங்கள் மூடுவது, பஸ், தியேட்டர், ஓட்டல்கள், சலூன் கடைகள், நகைக்கடைகள், துணிக்கடைகளில் 50 சதவீதம் பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும்.
இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகஅரசு விதித்து உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒருவருக்கு மட்டும் கொரோனா இருந்து வந்த நிலையில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டு உள்ளது. இதையொட்டி சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு உத்தரவு என தமிழக அரசு அறிவித்து உள்ள நிலையில் பொதுமக்கள் இன்று அதிகாலை முதல் கடலூர் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போட்டிபோட்டுக்கொண்டு மீன் வாங்கி சென்றதைக் காண முடிந்தது.
இதனால் முன்பு இருந்தது போல் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் எந்தவித அரசு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் வழக்கம்போல் பொதுமக்கள் செயல்பட்டது கடலூர் மாவட்டத்தில் தொற்று நோய் பரவல் அதிகரிக்கும் அபாயம் நிலவி உள்ளது.
இருந்தபோதிலும் பொதுமக்கள் மீன் வாங்குவது மிக அதிகமாக இருந்ததால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்கள் போக்கில் இருந்து மாறாமல் அலட்சியமாக இருந்து வந்ததை காண முடிந்தது.