உள்ளூர் செய்திகள்
பழுதாகி நின்ற பயணிகள் ரெயில்

மதுராந்தகம் அருகே தாம்பரம் வந்த பயணிகள் ரெயிலில் திடீர் கோளாறு- சென்னை ரெயில்கள் தாமதம்

Published On 2022-01-08 15:47 IST   |   Update On 2022-01-08 15:47:00 IST
விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வந்த பயணிகள் ரெயில் சக்கரம் முற்றிலும் இயங்காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே தொழுப்பேடு என்ற இடத்தில் விழுப்புரத்தில் இருந்து சென்னை தாம்பரம் வரை வந்த பயணிகள் ரெயில் சக்கரம் முற்றிலும் இயங்காமல் பழுது காரணமாக நிறுத்தப்பட்டது.

இதனால் இன்று காலை தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரெயில்கள் அரை மணி நேரம் தாமதமாக சென்னை வந்து சேர்ந்தன. அதன் பின்னால் சென்னை நோக்கி வந்த நிஜாமுதீன் விரைவு ரெயிலில் பயணிகள் அனைவரும் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

பழுதாகி நின்ற விழுப்புரம் பயணிகள் ரெயில் சக்கரத்தை சரி செய்யும் பணியில் ரெயில்வே துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Similar News