உள்ளூர் செய்திகள்
மரணம்

ராமாபுரம் அருகே புது மாப்பிள்ளை திடீர் மரணம்

Published On 2022-01-08 12:29 IST   |   Update On 2022-01-08 12:29:00 IST
ராமாபுரம் அருகே புது மாப்பிள்ளை திடீர் மரணம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போரூர்:

ராமாபுரம் ராயலா நகர் 1-வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பாலாஜி (28). சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு 9 மணி அளவில் டி.வி பார்த்து கொண்டே சாப்பிட்டு கொண்டு இருந்தார். அப்போது திடீரென வாந்தி எடுத்த பாலாஜி மயங்கி கீழே விழுந்தார். அவரது மனைவி சுஜிதா மற்றும் பெற்றோர் பாலாஜியை மீட்டு வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் பாலாஜி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாலாஜிக்கு 4 மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

 

Similar News