உள்ளூர் செய்திகள்
கார்

சிதம்பரத்தில் அதிரடி- 5 வாகனங்கள் பறிமுதல்

Published On 2022-01-07 16:59 IST   |   Update On 2022-01-07 16:59:00 IST
போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது.
சிதம்பரம்:

சிதம்பரம் மற்றும் சேத்தியாதோப்பு பகுதிகளில் வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா வாகன சோதனை மேற்கொண்டார்.

அப்போது அதிக பாரம் ஏற்றிச்சென்ற கனரக வாகனங்களுக்கு இணக்க கட்டணம் மற்றும் வரி பெறப்பட்டது. அவற்றில் 2 லாரிகள் தகுதிச் சான்று பெறாமலும் அரசுக்கு வரி செலுத்தாமலும் இருந்தது தெரியவந்து. உடனே 2 லாரிகள், 2 கார்கள் தகுதிச்சான்று இல்லாமல் சிறை பிடிக்கப்பட்டது.

போக்குவரத்து அல்லாத காரில் பயணிகளை வாடகைக்கு ஏற்றிச் சென்றதால் கார் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. மொத்தம் 5 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மேல் நடவடிக்கைகாக நிறுத்தப்பட்டது. மேலும் தமிழ்நாட்டு வரி ரூ.45 ஆயிரமும், இணக்க கட்டணம் ரூபாய் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டது. ஒரே நாளில் அரசுக்கு ரூ. 2 லட்சத்து 20 ஆயிரம் ரூ வசூலிக்கப்பட்டது என வாகன ஆய்வாளர் விமலா தெரிவித்தார்.

Similar News