உள்ளூர் செய்திகள்
ஒமைக்ரான் வைரஸ் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

திட்டக்குடி அருகே ஒமைக்ரான் வைரஸ் குறித்து காவல்துறையினர் விழிப்புணர்வு

Published On 2022-01-07 16:48 IST   |   Update On 2022-01-07 16:48:00 IST
முக கவசம் அணிவதின் கட்டாயம் குறித்து அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் டி.எஸ்.பி., சிவா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திட்டக்குடி:

கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் அறிவுறுத்தலின் பேரில் திட்டக்குடி டி.எஸ்.பி., சிவா தலைமையிலான போலீசார் நேற்று திட்டக்குடி பேருந்து நிறுத்தத்தில் அங்கு பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆகியோர்களை அழைத்து முக கவசம் அணிவதின் கட்டாயம், தடுப்பூசியின் பலன்கள், தனிமனித இடைவெளி குறித்து அரசு பேருந்தில் பயணிக்கும் பயணிகளுக்கும் டி.எஸ்.பி., சிவா மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சந்துரு ஆகியோர் முக கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அதுசமயம் டி.எஸ்.பி., சிவா பொதுமக்களிடம் பேசும்போது தென்னாப்பிரிக்கா மற்றும் ஹாங்காங்கில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட ஒமைக்ரான் வைரஸால் மிக வேகமாக பரவி வருகிறது எனவே பொதுமக்கள் அரசு அறிவிப்புகளை பின்பற்றவேண்டும் மேலும் ஒமைக்ரான் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் திட்டக்குடி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News