உள்ளூர் செய்திகள்
தியேட்டர்

50 சதவீத பேர் அனுமதிக்கப்படுகிறார்களா?- கடலூர் தியேட்டர்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2022-01-07 16:11 IST   |   Update On 2022-01-07 16:11:00 IST
தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, கையுறை அணிந்து தின்பண்டங்கள், உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென அதிகாரிகள் அறிவுறுத்தினார்கள்.
கடலூர்:

தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் கணிசமாக உயர்ந்து வருவதால் தியேட்டர்கள், பஸ்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு 50 சதவீதம் மக்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

மேலும் சமூக இடைவெளியை பயன்படுத்தி முகக்கவசம் அனைவரும் அணிந்திருக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்தனர்.

அதன்படி நேற்று முதல் கடலூர் மாவட்டத்தில் உள்ள 40 தியேட்டர்களிலும் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து 50 சதவீதம் மக்கள் மட்டுமே தியேட்டர் உரிமையாளர்கள் அனுமதித்து வருகின்றனர்.

இன்று காலை தாசில்தார் பலராமன், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி ஆகியோர் தலைமையில் வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் கடலூர் நகர் பகுதியில் உள்ள தியேட்டர்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சமூக இடைவெளியை பயன்படுத்தி பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து பாதுகாப்பாக திரையரங்கில் அனுமதிக்கப்படுகிறார்களா? மேலும் 50 சதவீதம் பொதுமக்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்களா? என்பதனையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அவ்வப்போது தியேட்டர் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து, பாதுகாப்பாக பொருட்கள், முறையாக கையுறை அணிந்து தின்பண்டங்கள் உணவுப் பொருட்கள் வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

Similar News