உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவையில் தொற்று பாதிப்பு அதிகரிப்பு- 177 பேருக்கு கொரோனா

Published On 2022-01-07 10:12 GMT   |   Update On 2022-01-07 10:12 GMT
புதுவையில் 177 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவையில் நேற்று 3 ஆயிரத்து 367 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதிதாக 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 129, காரைக்காலில் 41, மாகியில் 7 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று  வருகின்றனர். 

புதுவையில் 64, காரைக்காலில் 19, மாகியில் 9 பேர் என 92 பேர் தொற்றுடன் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். புதுவையில் 8, காரைக்காலில் 5, மாகியில் ஒருவர் என 14 பேர் சிகிச்சையில்  குணமடைந்து வீடு  திரும்பினர். 

புதுவை  மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 998 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 555 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

புதுவையில் 334, காரைக்காலில் 108, ஏனாமில் 2, மாகியில்26 பேர் என 470 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 562 பேர் கொரோனா  தொற்றுடன் உள்ளனர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 881 ஆக உள்ளது.  புதுவையில் 2-வது தவணை  உள்பட 14 லட்சத்து 37 ஆயிரத்து 971 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 

இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

புதுவையில் கொரோனா தொற்று நாள்தோறும் வேகமாக அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News