உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள்.

மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது

Published On 2022-01-06 15:07 IST   |   Update On 2022-01-06 15:07:00 IST
நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது.

இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து சமூக விரோதிகளை கண்காணித்து வந்த நிலையில் வெளிப்பாளையம் நாடார் தெருவில் ஒரு குடோனில் திருடப்பட்ட வாகனங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவுப்படி வெளிப்பாளையம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று  சிவன் செட்டிதெருவை சேர்ந்த ரமணன், செல்லூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த செல்சன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து 
10-க்கும் மேற்பட்ட விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Similar News