உள்ளூர் செய்திகள்
அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர் சங்கத்தினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போ

சாலைப்பணியாளர்கள் போராட்டம்

Published On 2022-01-06 14:07 IST   |   Update On 2022-01-06 14:07:00 IST
அரியலூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப்பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்: அரியலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மெழுவர்த்தி ஏந்தி சாலைப்பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கி.மீட்டருக்கு 2 சாலைப் பணியாளர்கள் என இட ஒப்புதல் வழங்கி கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும். 
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணி காலமாக முறைப்படுத்தி பணப் பலன்களை வழங்கிட வேண்டும். சாலைப்பணியாளர்களின் பணி நீக்க காலத்திலும், பணிக்காலத்திலும் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு பணி நியமனம் ஆணை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் அரியலூர் மாவட்டத் தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் சிவக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News