உள்ளூர் செய்திகள்
அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சியை மாவட்ட போலீஸ் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா

கல்லூரி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி

Published On 2022-01-06 14:05 IST   |   Update On 2022-01-06 14:05:00 IST
அரியலூர் அரசு கல்லூரி மாணவிகளுக்கு காவல் துறை சார்பில் தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர்: அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட காவல் துறை சார்பில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி கல்லூரி முதல்வர் மலர்விழி தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், பெண்களின் முன்னேற்றம் பற்றி பேசினால் மட்டும் போதாது. ஏனென்றால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே போகிறது. முதலில் பெண்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் திடமாக இருக்க வேண்டும். எனவே மாணவிகள் தங்களது நேரத்தை தேவையற்ற முறையில் செலவிடாமல், தங்களுக்கு தேவையான தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டு தங்களைக் காத்துக்கொள்ளலாம். 
இந்த பயிற்சியானது பெண்கள் தன்னைத்தானே எப்படி பாதுகாத்து கொள்வது என்று மட்டும் சொல்லித்தரப்படுவதில்லை. மனரீதியாக பெண்கள் தயாராக வேண்டும்   என்பதையும் சேர்த்தே கற்றுத்தரப்படுகிறது சிலம்பம், கராத்தே உள்ளிட்ட பயிற்சிகள் மாணவிகளுக்கு அளிக்கப்படுகிறது என்றார்.

Similar News