உள்ளூர் செய்திகள்
முன்களப் பணியாளர்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட சான்றிதழ்
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்களப்பணியாளர்கள் பங்கேற்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜனதா மருத்துவ அணி சார்பில் முன்கள பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி திருமுருகன்பூண்டியில் நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.
மருத்துவ அணி மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். மாநில மருத்துவ அணி தலைவர் விஜயபாண்டியன், ஐ.டி., பிரிவு மாநில தலைவர் நிர்மல்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இருந்து முன்களப் பணியாளர்கள் பங்கேற்றனர்.
இதில் கொரோனா காலத்தில் தங்கள் உயிரை கூட பொருட்படுத்தாமல் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், தூய்மை பணியாளர்களுக்கு பிரதமர் மோடி கையெழுத்திட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.