உள்ளூர் செய்திகள்
கூட்டத்தில் இந்து முன்னேற்ற கழக மாநில தலைவர் வக்கீல் கோபிநாத் பேசிய போது எடுத்த படம்.

கோவில்களில் தரிசன கட்டணம் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் - இந்து முன்னேற்ற கழக கூட்டத்தில் தீர்மானம்

Published On 2022-01-03 13:18 IST   |   Update On 2022-01-03 13:18:00 IST
அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதையை பாடமாக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும்.
திருப்பூர்:

இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருப்பூர் காங்கேயம் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா, புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு விழா மற்றும் அமைப்பின் கொள்கை விளக்க விழா நடைபெற்றது. விழாவில் மாநில செயலாளர் கே.ஹரிகிருஷ்ணன் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் கே.கோபிநாத் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் கட்சியின் புதிய பொறுப்பாளர்களையும் அறிவித்தார்.

இதில் மாநில பொறுப்பாளர் தாமோதரன், மாவட்ட பொறுப்பாளர்கள் ஸ்ரீகாந்த், ஹரி, விஜயகுமார், உதயகுமார்,மாநகர செயலாளர் சத்தியமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அனைத்து பள்ளிகளிலும் பகவத் கீதையை பாடமாக்க வேண்டும். பள்ளிகளில் பாலியல் பிரச்சினைகளை தவிர்க்க வேண்டும். ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியே ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.   

தமிழகத்திலுள்ள அனைத்து கோவில்களில் தரிசனத்திற்கு கட்டணம் வசூல் செய்வதை தடை செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News