உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பட்டாசு தொழிற்சாலை விபத்து- நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

Published On 2022-01-02 18:06 IST   |   Update On 2022-01-02 18:06:00 IST
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
சென்னை:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டம் களத்தூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் நான்கு பேர் இறந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா மூன்று லட்சமும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சமும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர்  கூறி  உள்ளார்.

Similar News