உள்ளூர் செய்திகள்
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புத்தாண்டு கொண்டாட்டம்-சிறப்பு திருப்பலி
வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நள்ளிரவு 12 மணிக்கு பேராலய வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கமான சேவியர் திடலில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ்அம்புரோஸ் தலைமையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
தொடர்ந்து புத்தாண்டை வரவேற்கும் விதமாக வாணவேடிக்கை நடந்தது. பின்னர் 2021-ம் ஆண்டில் நடந்த நல்ல நிகழ்வுகளை நினைவு கூர்ந்து தீய நிகழ்வுகள் புதிய ஆண்டில் நடைபெறாமல் இருக்க பிரார்த்தனை செய்து கொண்டனர்.
பின்னர் புத்தாண்டை வரவேற்று ஒருவரையொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். இதன்பின்னர் பேராலயம் சார்பில் புத்தாண்டை வரவேற்றனர். பேராலய அதிபர் இருதயராஜ், பங்குதந்தை அற்புதராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள் கலந்து கொண்டனர்.