உள்ளூர் செய்திகள்
கைது

திருக்கோவிலூரில் கஞ்சா, புகையிலை விற்ற 3 பேர் கைது

Update: 2022-01-01 07:44 GMT
திருக்கோவிலூரில் கஞ்சா, புகையிலை விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் கீழையூர், சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் கீழையூர் சிவன் கோவில் அருகில் கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதேபகுதி வள்ளுவர் தெருவைச் சேர்ந்த தாஸ் மகன் தாவீதுராஜா(வயது 23) என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் சைலோம் மாரியம்மன் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த முருகன் மகன் ஹரிஹரன்(26) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் தலைமையிலான போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் திருக்கோவிலூர் அருகே உள்ள பாடியந்தல் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததாக ராஜரத்தினம் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 260 புகையிலை பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News