உள்ளூர் செய்திகள்
மாமல்லபுரம்

மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் சுற்றுலா பஸ்களுக்கு தடை

Published On 2022-01-01 13:07 IST   |   Update On 2022-01-01 13:07:00 IST
செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பெயரில் இன்றும், நாளையும் சுற்றுலா பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

மாமல்லபுரம்:

புத்தாண்டையொட்டை இன்றும், நாளையும் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இதையடுத்து செங்கல்பட்டு போலீஸ் எஸ்.பி. அரவிந்தன் உத்தரவின் பெயரில் இன்றும், நாளையும் சுற்றுலா பஸ்கள் மாமல்லபுரம் நகருக்குள் நுழைய தடை விதித்துள்ளது.

பஸ்சில் வரும் சுற்றுலா பயணிகள் ஊருக்கு வெளியே பூஞ்சேரி, கிழக்கு கடற்கரை சாலையில் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் பஸ்சை நிறுத்தி விட்டு நடந்து வர வேண்டும் என மாமல்லபுரம் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Similar News