உள்ளூர் செய்திகள்
கீழ்கதிர்ப்பூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

பசுமையை மேம்படுத்த ஒரே நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டது- கலெக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்

Published On 2021-12-31 13:33 IST   |   Update On 2021-12-31 13:33:00 IST
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கீழ்கதிர்ப்பூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மரக்கன்று நட்டு இதனை தொடங்கி வைத்தார்.
காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 5 ஊராட்சி ஒன்றியங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாபெரும் மரம் வளர்ப்பு மூலம் ஊரக பகுதிகளில் காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளக் கூடிய வகையில் பசுமை பகுதியினை மேம்படுத்தும் நோக்கிலும், பழம்தரும் மரங்கள், தீவனம் சார்ந்த மரங்கள் மற்றும் பொருளாதார அடிப்படையில் பயன் தரும் மரங்கள் ஆகியவற்றை நட திட்டமிடப்பட்டது.

அதன்படி ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கீழ்கதிர்ப்பூர் ஊராட்சியில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி மரக்கன்று நட்டு இதனை தொடங்கி வைத்தார்.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 23 ஆயிரத்து 210 மரக்கன்றுகளும், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் 20 ஆயிரத்து 26 மரக்கன்றுகளும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒனறியத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 ஆயிரத்து 493 மரக்கன்றுகளும், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 797 மரக்கன்றுகளும் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகிளில் 30 ஆயிரத்து 240 மரக்கன்றுகளும் நடப்பட்டது.

இதில் நாவல் 20 ஆயிரத்து 430, புளியன் 15 ஆயிரத்து 250, வேம்பு 8 ஆயிரத்து 680, பூவரசன் 8 ஆயிரத்து 560, நெல்லி 6 ஆயிரத்து 140, புங்கன் 6 ஆயிரத்து 100, கொய்யா 3 ஆயிரத்து 500, பொன்னாரை 3 ஆயிரம், இலுப்பை 2 ஆயிரத்து 160, மாதுளை 2 ஆயிரத்து 90, குலமோகர் 1,580, நொச்சி 1,250, காட்டுவா 1,100, பாதாம் 1,090, வாகை 1,010, பலா 1000, தகரை 1,000 எண்ணிக்கையில் நடப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் எழிலரசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் ஒன்றியக்குழு தலைவர் மலர்க்கொடி குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News