உள்ளூர் செய்திகள்
ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை

மழைநீர் தேக்கம் எதிரொலி - சென்னையில் 4 சுரங்கப்பாதைகள் மூடல்

Published On 2021-12-31 07:48 IST   |   Update On 2021-12-31 09:08:00 IST
தமிழகத்தில் பருவமழை காலத்தில் பெய்த கனமழையால் பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழை பதிவாகி இருந்தது.
சென்னை:

சென்னையில் நேற்று நண்பகல் முதல் பெய்த மழை மாலையிலிருந்து வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையின் முக்கிய சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இந்நிலையில், சென்னையில் மழைநீர் தேங்கியுள்ள 4 சுரங்கப் பாதைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என சென்னை போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, துரைசாமி சுரங்கப்பாதை, ஆர்.பி.ஐ சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

Similar News