விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
பதிவு: டிசம்பர் 28, 2021 15:32 IST
மணல்
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் அரங்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்ய முயன்றனர். இதனால் மாட்டு வண்டியை ஓட்டி வந்த அந்த நபர், சாலையின் ஓரமாக மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் மாட்டு வண்டியை சோதனை செய்தபோது அதில் கொள்ளிடம் ஆற்றுப்படுகை பகுதியில் இருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிக்கு மணல் கடத்தியது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபரை தேடி வருகிறார்கள்.