உள்ளூர் செய்திகள்
கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது வழக்கு
மீன்சுருட்டி அருகே கடைகளில் புகையிலை பொருட்கள் விற்ற 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அன்பழகன், கோவிந்தராஜ் மற்றும் போலீசார் மீன்சுருட்டி பகுதிகளில் உள்ள கடைவீதியில் சோதனை செய்தனர்.
ஜெயங்கொண்டம் குறுக்கு சாலையில் உள்ள கடைகளில் சோதனை நடத்தியபோது யுத்தப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரவணன்(வயது 35), செந்தில்குமார்(36) மற்றும் சுண்டிப்பள்ளம் காலனி தெருவை சேர்ந்த தமிழரசன்(34) ஆகியோர் தங்களது கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது.
இதையெடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.