உள்ளூர் செய்திகள்
போராட்டம்

திருக்கடையூரில் 4-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

Published On 2021-12-24 10:45 GMT   |   Update On 2021-12-24 10:45 GMT
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் 4வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிற நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஒப்பந்த நிறுவனத்துக்கும், தருமபுரம் ஆதீனத்துக்கும் ஆதரவாகவே பேச்சு வார்த்தைகளை நடத்துவதால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை முடித்துக் கொள்ள முடியாது என்று கூறினர்.

கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் வேளாங்கண்ணி-சென்னை தேசிய நெடுஞ்சாலையோரமாக இரவு-பகலாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் நடத்தப்படும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் பகுதி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள், சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் விவசாயிகளுக்கு துணையாக போராட்டக்களத்தில் இருந்து வருகின்றனர்.

நான்கு வழிச்சாலையால் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கும், குடியிருப்புகளை இழக்கும் ஏழைகளுக்கும் உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்க வேண்டுமென்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக டி.மணல்மேடு கிராமத்தை சேர்ந்த ஒட்டுமொத்த பெண்களும் ஊர் மறியல் செய்து போராட்டத்தில் ஈடுப்பட்டு வருவதோடு டி.மணல்மேடு கிராமத்தின் மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலாளர் உதயக்குமார் தலைமையில் உணவு, குடிநீர், தேநீர், இரவு படுக்கைகான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

கொத்தங்குடி கிளை சார்பில் அரிசி மூட்டை பண உதவி, திருக்கடையூர் முத்து வாட்டர் பாட்டீல், பிஸ்கட் ஆகியவற்றை வழங்கினர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர கலெக்டரும், தருமபுரம் ஆதீனமும் முடிவு எடுப்பார்களா என எதிர்பாப்பு நிலவுகிறது.
Tags:    

Similar News