உள்ளூர் செய்திகள்
தீவிபத்து

ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீடு எரிந்து சேதம்

Published On 2021-12-22 16:58 IST   |   Update On 2021-12-22 16:58:00 IST
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே விவசாயி வீட்டில் ஏற்பட்ட தீயில் பணம் மற்றும் நகைகள் எரிந்து சேதம் ஆனது.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள உத்திரகுடிகிராமம் சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த விவசாயி செந்தாமரை கண்ணன். இவர் தனது மனைவியுடன் வீட்டில் இருந்த போது எதிர்பாரத விதமாக கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறை ஆய்வாளர் மோகன்ராஜ் தலைமையிலான தீயணைப்புதுறையினர் விரைந்துசென்று தீயை போராடி அணைத்தனர்.

அதற்குள் வீடு முற்றிலும் எரிந்தது. வீட்டில் மகனுக்கு பள்ளியில் கட்டுவதற்கு வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் 9 பவுன் நகை, மேலும் பத்திரம், ஆதார், ரேசன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் எரிந்தது சேதம்  ஆனது குறிப்பிடத்தக்கது.

Similar News