உள்ளூர் செய்திகள்
மனு கொடுக்க வந்தவர்கள்.

இரும்பு விலையை குறைக்க கலெக்டரிடம் மனு

Published On 2021-12-20 09:29 GMT   |   Update On 2021-12-20 09:29 GMT
குறுந்தொழிலாக செய்கின்ற எங்கள் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி போடப்படுவதை 5 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட தமிழக கிரில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இன்று திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். 

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கடந்த 2 ஆண்டுகளாக எங்கள் தொழிலில் மூலப் பொருளான இரும்பின் விலை கிட்டத்தட்ட 100 சதவீதம் விலை உயர்ந்துள்ளதால் எங்கள் தொழில் பல இடங்களில் மூடப்பட்டும் எங்கள் தொழிலாளர்கள் வாழ்விழந்தும் உள்ளார்கள். 

அவர்களையும், எங்கள் தொழிலையும் காக்க இரும்பு விலையை குறைக்க ஆவன செய்ய வேண்டும். பணிசெய்யும் போது எதிர்பாராத விபத்துகளால் உயிரிழக்கும் தொழிலாளிகளுக்கு குடும்ப நல நிதியாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.

குறுந்தொழிலாக செய்கின்ற எங்கள் தொழில் உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி போடப்படுவதை 5 சதவீதமாக குறைக்க ஆவன செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News