உள்ளூர் செய்திகள்
அண்ணாமலை காலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த போது எடுத்த படம்

தி.மு.க.வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர்: அண்ணாமலை குற்றச்சாட்டு

Published On 2021-12-17 14:28 IST   |   Update On 2021-12-17 17:04:00 IST
அ.தி.மு.க.வினர் வீடுகளில் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் வடக்கு, தெற்கு மண்டல தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை வந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை தரிசனம் செய்தார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வினர் வீடுகளில் காழ்புணர்ச்சி காரணமாகத்தான் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

மு. க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பேசியதுதான் இப்போது அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்காக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 


மாரிதாஸ் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதி தெரிவித்த கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாமல் தி.மு.க.வினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். நீதித்துறையை அரசியலுக்கு மேலே வையுங்கள் சில வழக்குகளில் பா.ஜ.க.வுக்கு எதிராக தீர்ப்புகள் வந்துள்ளது. நீதித்துறையில் பா.ஜ.க. தலையிடாது.

மாரிதாஸ் வழக்கை விசாரித்த நீதிபதி பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் என்பது தவறானது. அபத்தமான குற்றச்சாட்டுகளை நிறுத்தி கொள்ளுங்கள்.

தமிழகத்தில் 70 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 சதவீதம் பேர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அதன் மூலம் ஒமைக்ரான் பாதிப்பிலிருந்து தப்பலாம். எனவே தயவு செய்து அனைவரும் 2 கட்ட தடுப்பூசி செலுத்தி கொள்ளுங்கள்.தற்போதைக்கு வேறு தடுப்பூசி தேவைப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்... ஒமைக்ரான் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது: ஆய்வில் தகவல்

Similar News