உள்ளூர் செய்திகள்
வெம்பாக்கம் அருகே மின்மோட்டார் திருடிய 3 வாலிபர்கள் கைது
வெம்பாக்கம் அருகே மின்மோட்டார் திருடிய 3 வாலிபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள மின் மோட்டார் இருந்தது. அந்த மின் மோட்டாரை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து புகாரின் பேரில் தூசி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணசுவாமி (வயது 22), விக்னேஷ் (23), அஜித் (21) ஆகியோர் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.