உள்ளூர் செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3102 வழக்குகளுக்கு தீர்வு

அரியலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,102 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2021-12-13 08:57 IST   |   Update On 2021-12-13 08:57:00 IST
அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 7 ஆயிரத்து 866 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விசாரித்ததில், 3 ஆயிரத்து 102 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரத்து 931-க்கு தீர்வு காணப்பட்டது.
அரியலூர்:

அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், அரியலூர், செந்துறை நீதிமன்றங்களுக்காக நடந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களை, அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.

ஜெயங்கொண்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தினை சார்பு நீதிபதியும், வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான திருமணி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 7 ஆயிரத்து 866 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு விசாரித்ததில், 3 ஆயிரத்து 102 வழக்குகளுக்கு மொத்தம் ரூ.4 கோடியே 63 லட்சத்து 95 ஆயிரத்து 931-க்கு தீர்வு காணப்பட்டது.

இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், மூத்த சிவில் நீதிபதியுமான அழகேசன் செய்திருந்தார்.

Similar News