உள்ளூர் செய்திகள்
அரியலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - கடையின் உரிமையாளர்களுக்கு அபராதம்
அரியலூர் அருகே கடைகளில் விற்பனைக்காக மற்றும் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அரியலூர்:
அரியலூர் நகரில் பல இடங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து நகராட்சி ஆணையர் (பொறுப்பு) தமயந்தி மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் காந்தி மார்க்கெட், சின்னக்கடை தெரு, பெரிய கடைத்தெரு, ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது ஒருசில கடைகளில் விற்பனைக்காக மற்றும் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதாக கடையின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.