உள்ளூர் செய்திகள்
விபத்துக்குள்ளான போலீஸ் வாகனம்

உடல்களை கொண்டு செல்லும்போது விபத்துக்குள்ளான ஆம்புலன்ஸ், போலீஸ் பாதுகாப்பு வாகனம்

Published On 2021-12-09 14:17 IST   |   Update On 2021-12-09 17:22:00 IST
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் கொண்டு செல்லும்போது ஆம்புலன்ஸ் மற்றும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி:

வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

அப்போது, பாதுகாப்புக்காக போலீசார் வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுக் கொண்டிருந்தனர். நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில் காவலர் வாகனம் வளைவில் திரும்பும்போது சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் போலீஸ் அதிகாரி உள்பட சிலர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உடலை எடுத்துச் சென்ற ஆம்புலன்ஸ் ஒன்று மற்றொரு இடத்தில் விபத்தில் சிக்கியது.  இதனால், விபத்து ஏற்பட்ட ஆம்புலன்ஸில் இருந்து மற்றொரு வாகனத்துக்கு உடல் மாற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக, வெலிங்டன் ராணுவ பயிற்சி மைதானத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல்கள் கொண்டு செல்லும்போது, மேட்டுப்பாளையம் அருகே சாலையோரம் குவிந்திருந்த பொதுமக்கள் வழியெங்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படியுங்கள்.. ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- உயிரிழந்த வீரர்களுக்கு முதலமைச்சர் அஞ்சலி

Similar News