உள்ளூர் செய்திகள்
விபத்தில் உருக்குலைந்த ஹெலிகாப்டர்.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு

Published On 2021-12-09 14:17 IST   |   Update On 2021-12-09 15:05:00 IST
பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியான ஹெலிகாப்டர் விபத்து குறித்து குன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நேற்று மதியம் குன்னூர் அருகே காட்டேரி மலைப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்தியாவையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து முப்படைகளும் விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் அப்பர் குன்னூர் காவல் நிலையத்தில் இந்த விபத்து குறித்து குற்றவியல் சட்டப்பிரிவு 174-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News