உள்ளூர் செய்திகள்
பிபின் ராவத்

ராணுவ பயிற்சி பெற்ற ஊரிலேயே உயிரிழந்த பிபின் ராவத்

Published On 2021-12-09 06:18 GMT   |   Update On 2021-12-09 06:18 GMT
தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் பிபின் ராவத் விபத்தில் சிக்கி பலியானார்.
குன்னூர்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில், 40 நாடுகளை சேர்ந்த 430 பேர் ராணுவ பயிற்சி பெற்று, ராணுவ உயரிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

குன்னூர் நஞ்சப்பாசத்திரம் பகுதியில், நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் பலியான முப்படை தளபதி பிபின் ராவத் பல்வேறு உயரிய பதவிகளை வகித்தார். அதற்கான பெருமை இந்த கல்லூரிக்கு உள்ளது. அவரும் இந்த கல்லூரியில் பயிற்சி பெற்ற மாணவர் ஆவார்.

இந்த நிலையில், தான் படித்த கல்லூரியில் நடக்க கூடிய கருத்தரங்கில் பங்கேற்று, பயிற்சி ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடுவதற்காக வந்தபோது தான் அவர் விபத்தில் சிக்கி பலியானார்.

இந்த சம்பவம் ராணுவ பயிற்சி கல்லூரி மாணவர்கள், உயர் அதிகாரிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குன்னூரில் பயின்று நம் ராணுவ படைக்கு தலைமை வகித்து, பின்னர் முப்படைகளின் தளபதியாக தலைநிமிர்ந்த அந்த சிங்கம், தன் ராணுவ தந்திரங்கள் பயின்ற மண்ணிலேயே கம்பீரமாக தலை சாய்ந்தது, பெரும் வரலாற்று பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News