உள்ளூர் செய்திகள்
கீழநத்தம் கிராமத்தில் உள்ள ஆதியான் ஏரியில் நீர் நிரம்பியுள்ளதை காணலாம்

விக்கிரமங்கலம் பகுதியில் மழையால் நிரம்பி வழியும் ஏரிகள்

Published On 2021-12-01 10:02 GMT   |   Update On 2021-12-01 10:02 GMT
விக்கிரமங்கலம் பகுதியில் மழையால் ஏரிகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போது பெய்து வரும் கனமழையால் பாசன ஏரிகளும், குளம், குட்டைகளும் நிரம்பி வழிகின்றன. இதில் விக்கிரமங்கலம் அருகே கீழநத்தம் கிராமத்தில் உள்ள ஆதியான் ஏரியை நம்பி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர் நடுவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழையால் அந்த ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் விக்கிரமங்கலம் அம்பாபூர் இடையே உள்ள புற்றேரி கால்நடைகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரியாக உள்ளது. இந்த ஏரியும் மழையால் நிரம்பி வழிகிறது.

மேலும் இப்பகுதியில் உள்ள அனைத்து பெரிய மற்றும் சிறிய ஏரிகளும், குளம், குட்டைகளும் நிரம்பியுள்ளன. இதனால் இப்பகுதியில் ஏரியை நம்பியே விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News