செய்திகள்
தொடர் மழை- கோத்தகிரி நேரு பூங்கா வெறிச்சோடியது
தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் கோத்தகிரி நேரு பூங்கா வெறிச்சோடியது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் நேரு பூங்கா முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. இங்கு அழகிய புல் தரைகள், ரோஜா பூந்தோட்டம், சிறுவர் விளையாட்டு பகுதி, நூற்றாண்டு பழமை வாய்ந்த பழங்குடியின கோத்தர் இன மக்களின் குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் கோவில் ஆகியவை அமைந்து உள்ளன.
இந்த பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் வந்து, தங்களது குழந்தைகளை அங்குள்ள சிறுவர் விளையாட்டு பகுதியில் விளையாட விட்டு மகிழ்கின்றனர். இதனால் உள்ளூர் மக்களுக்கும் நேரு பூங்கா பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது.
இந்த நிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடும் குளிரான காலநிலை நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்கள் பச்சை தேயிலை பறிக்க தோட்டங்களுக்கு செல்லவும், காய்கறி விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கு செல்லவும் முடியாத நிலை உள்ளது.
மாறுபட்ட காலநிலை மற்றும் தொடர் மழை பெய்து வருவதால் நேரு பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து உள்ளது. மேலும் உள்ளூர் மக்களும் பூங்காவுக்கு செல்வதை விரும்பவில்லை. இதனால் நேரு பூங்கா ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதேபோன்று கோடநாடு காட்சிமுனை, கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.