செய்திகள்
கனமழை

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை

Published On 2021-11-27 00:44 GMT   |   Update On 2021-11-27 00:44 GMT
சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் மழை விட்டு விட்டு பெய்தது. தொடர்ந்து, கனமழையும் பெய்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் எழும்பூர், சென்ட்ரல், ஆலந்தூர், பெருங்குடி, தரமணி, சைதாப்பேட்டை, கிண்டி, பரங்கிமலை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதேபோல், கோயம்பேடு, நெற்குன்றம், மதுரவாயல், வானகரம், போரூர், வளசரவாக்கம் ஆகிய பகுதிகளிலும் கனமழை விடாமல் பெய்து வருகிறது. இதனால், சாலைகள் எங்கும் மழை நீர் தேங்கி உள்ளது.

Tags:    

Similar News