செய்திகள்
விழுப்புரம் அருகே மலட்டாற்றில் தரைபாலம் உடைந்தது

விழுப்புரம் அருகே மலட்டாற்றில் தரைபாலம் உடைந்தது

Update: 2021-11-21 07:24 GMT
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 22 செ.மீ. மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளபெறுக்கு ஏற்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் அருகே திருப்பாச்சனூரில் மலட்டாறு ஓடுகிறது. இது தென்பெண்ணை ஆற்றின் கிளை ஆறாகும். மழை காலத்தில் மட்டும் இந்த ஆற்றில் தண்ணீர் வரும்.

இந்த ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் தளவானூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகிறார்கள். எனவே இந்த பாலம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

கடந்த 10 நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்துவருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 22 செ.மீ. மழை பெய்ததால் காட்டாற்றில் வெள்ளபெறுக்கு ஏற்பட்டது. இதுதவிர சாத்தனூர் அணையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்த தண்ணீர் முழுவதும் கிளை ஆறான மலட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையும் அதிக அளவு தண்ணீர் வந்ததால் மலட்டாற்றில் உள்ள தரைப்பாலம் திடீரென உடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிராம மக்கள் மாற்று வழியாக சென்று வருகிறார்கள். 


Tags:    

Similar News