செய்திகள்
கோப்புபடம்

வெள்ளக்கோவிலில் சாலையின் நடு தடுப்பில் பூச்செடிகள் வளர்க்கும் பணி தொடக்கம்

Published On 2021-11-20 07:07 GMT   |   Update On 2021-11-20 07:07 GMT
வெள்ளக்கோவில் வழியாகச் செல்லும் நாகப்பட்டினம், கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெள்ளக்கோவில்:

வெள்ளக்கோவில் கடை வீதியில் சாலையின் நடு தடுப்பில் பூச்செடிகள் நட்டு வளர்க்கும் பணி தொடங்கப்பட்டது. இப்பணியை வெள்ளக்கோவில் நகராட்சி ஆணையர் மோகன்குமார் தொடங்கி வைத்தார். 

நகராட்சி பொறியாளர் மணி முன்னிலை வகித்தார். நகராட்சி நிர்வாகம், வெள்ளக்கோவில் ரோட்டரி சங்கம், நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகிகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனர். 

வெள்ளக்கோவில் வழியாகச் செல்லும் நாகப்பட்டினம், கூடலூர் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தப்பட்டு சாலை நடுவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பசுமை இயற்கையை மேம்படுத்தும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் தூரமுள்ள நடு தடுப்பில் பூச்செடிகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. 
Tags:    

Similar News