செய்திகள்
பனிமூட்டம் காரணமாக வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வரும் காட்சி.

அருப்புக்கோட்டையில் பனி மூட்டம்- பொதுமக்கள் அவதி

Published On 2021-11-20 12:32 IST   |   Update On 2021-11-20 12:32:00 IST
அருப்புக்கோட்டையில் காலை நேரத்தில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் பனிமூட்டத்தில் இருந்து காத்துக்கொள்வதற்காக சுவெட்டர் அணிந்தவாறு சென்றனர்.
அருப்புக்கோட்டை:

அருப்புக்கோட்டையில் பனி மூட்டதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அருப்புக்கோட்டையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் பனி மூட்டம் ஏற்பட்டது. புறவழிச்சாலை, மதுரை சாலை, விருதுநகர் சாலை உள்ளிட்ட சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் ஏற்பட்டது. இதனால் வாகனங்களில் வருபவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சாலைகளில் சென்றனர்.

காலைநேரத்தில் நடைப்பயிற்சிக்கு செல்வோர் பனிமூட்டத்தில் இருந்து காத்துக் கொள்வதற்காக சுவெட்டர் போன்றவற்றை அணிந்தவாறு சிரமத்துடன் நடைப்பயிற்சிக்கு சென்றனர். அதிகாலையில் ஏற்பட்ட பனி மூட்டத்தால் அருப்புக்கோட்டையில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
Tags:    

Similar News