செய்திகள்
பெரும்பச்சேரி கிராமத்தில் பயிரிடப்பட்ட கரும்பு நீரில் மூழ்கி உள்ளதை காணலாம்

மானாமதுரை அருகே கண்மாய் நீர் புகுந்து பயிர்கள் மூழ்கின

Published On 2021-11-19 15:42 IST   |   Update On 2021-11-19 15:42:00 IST
வைகையில் திறக்கப்பட்ட தண்ணீர், மழை நீரால் மானாமதுரை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.
மானாமதுரை:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது கட்டிக்குளம் கண்மாய். இந்த கண்மாய் மூலம் கொம்புக் காரனேந்தல், மேட்டுமடை, பெரும்பச்சேரி, கட்டிகுளம் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறுகின்றன.

கட்டிகுளத்தில் கண்மாய், கால்வாய் ஆகியவை சரிவர தூர் வாராததால் கண்மாய்க்கு வரும் மழை தண்ணீர் வெளியேறி பெரும்பச்சேரி கிராமத்தில் பயிரிடப்பட்ட நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சூழ்ந்ததால் நீரில் மூழ்கின. மேலும் 10-க்கும் மேற்பட்ட மாடுகள் உள்ளே சிக்கின. அவற்றை விவசாயிகள் மீட்டனர்.

வைகையில் திறக்கப்பட்ட தண்ணீர், மழை நீரால் மானா மதுரை பகுதியில் கண்மாய்கள் நிரம்பி வருகின்றன. கண்மாய் நிரம்பும் அளவிற்கு கண்மாய் பல இடங்களில் தூர் வாராமல் பல இடங்களில் தண்ணீர் வெளியேறி வயல்வெளிக்குள் சென்று வருகிறது.

மானாமதுரை அருகே பெரும்பச்சேரி கிராமத்தில் கட்டிகுளம் கண்மாய்க்கு வரும் தண்ணீர் வெளியேறி பெரும்பச்சேரி கிராமத்தில் பயிரிடப்பட்டு இருந்த நெல், கரும்பு ஆகியவை நீரில் மூழ்கி உள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் வீணாகி உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பெரும்பச்சேரி விவசாயி சந்திரமோகன் கூறுகையில், கட்டிகுளத்தில் கண்மாய், கால்வாய் ஆகிய வற்றை தூர்வாரவில்லை. வைகையில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து கண்மாய் நிரப்புவதில் இருக்கும் அக்கறை, கண்மாய், கால்வாயை தூர்வாருவதில் காட்டவில்லை. இதனால் கண்மாய் தண்ணீர் வெளியேறி 8 நாட்களுக்கு மேலாக தண்ணீர் நின்று வருகிறது. இதற்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News