செய்திகள்
கோப்புபடம்

பல்லடம் பஸ் நிலையத்தில் வாலிபர்கள் மோதலால் பரபரப்பு

Published On 2021-11-19 09:13 GMT   |   Update On 2021-11-19 09:13 GMT
ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடிச்சென்று அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர்.
பல்லடம்:

பல்லடம் பஸ் நிலையத்தில் நேற்று பஸ்சுக்காக பொதுமக்கள் காத்திருந்தனர். அப்போது சுமார் 35-40 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் ஒருவரை ஒருவர் சராமரியாக திட்டிக் கொண்டிருந்தனர். 

இது திடீரென கை கலப்பாக மாறியது. பஸ் நிலையத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக நேரக் காப்பாளர் அலுவலக அறை முன்பு நடைபெற்ற சண்டையானது அங்கு யாரும் இல்லாததால் அலுவலகத்திற்குள் புகுந்து இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கி கொண்டனர் .

இதில் ஒருவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் கேட்டு அக்கம் பக்கம் உள்ள பொதுமக்கள் ஓடிச்சென்று அவர்களை தடுத்து சமாதானம் செய்தனர். பின்னர் அதில் ஒருவர் பஸ்சில் ஏறி சென்றுவிட்டார். 

காயம் அடைந்த வாலிபரை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

பயணிகளுக்கு தகவல் சொல்லக்கூடிய நேரக் காப்பாளர் அலுவலகத்தை திறந்து போட்டுவிட்டு சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பஸ் நிலையத்தில் இதுபோன்ற குற்றச்செயல்கள் நடைபெறாது இருக்க பல்லடம் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News