செய்திகள்
மணமகள் கிடைக்காமல் 40 ஆயிரம் பிராமண இளைஞர்கள் தவிப்பு

தமிழ்நாட்டில் மணமகள் கிடைக்காமல் 40 ஆயிரம் பிராமண இளைஞர்கள் தவிப்பு

Published On 2021-11-18 14:31 IST   |   Update On 2021-11-18 16:12:00 IST
பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிராமண பெண்களை தேடுவதற்காக ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளதாக பிராமணர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தேடிக்கிட்டே இருக்கிறோம் இன்னும் பெண் கிடைக்கவில்லை என்று பலர் சொல்ல கேட்டிருக்கலாம். பிராமணர் சமூகத்தில் தமிழகத்தில் மட்டும் 40 ஆயிரம் இளைஞர்கள் பெண் கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக பிராமணர் சங்க தலைவர் நாராயணன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பீகார், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பிராமண பெண்களை தேடுவதற்காக ஒரு அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது. இந்தி படிக்கவும், பேசவும் தெரிந்தவரை இதற்கு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட உள்ளார்.

30 முதல் 40 வயதுக்குட்பட 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் பிராமண இளைஞர்கள் மணப்பெண்களை கண்டுபிடிக்க முடியாததால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

திருமண வயதில் 10 பிராமண ஆண் குழந்தைகள் இருந்தால், தமிழகத்தில் திருமண வயதில் ஆறு பெண் குழந்தைகள் மட்டுமே உள்ளனர்.

எனவே லக்னோ மற்றும் பாட்னாவில் உள்ள மக்களுடன் தான் தொடர்பு கொண்டு வருகிறார்கள். பிராமணர்கள் மத்தியில் இந்த நடவடிக்கையை வர வேற்றாலும், வேறு கருத்துக்களும் உள்ளன.

திருமண வயதில் தமிழ் பிராமணப் பெண்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லை என்றாலும் ஆண்களுக்கு மணப்பெண்கள் கிடைக்காததற்கு இது ஒன்றே காரணம் அல்ல.

மணமகன்களின் பெற்றோர்கள் திருமணங்களில் ஆடம்பர நிகழ்ச்சியையும் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் திருமணத்தை எளிமையான முறையில் நடத்துவதற்கு எது தடையாக இருக்கிறது? ஏன் கோவிலோ அல்லது வீட்டிலோ செய்யக் கூடாது?.


இன்றைய காலத்திலும் கூட, தமிழ் பிராமண திருமணங்கள் இரண்டு முதல் 3 நாட்கள் வரை நீட்டிக்கப்படுகின்றன. இதில் வரவேற்பு மற்றும் பிற திருமணத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சடங்குகள் அடங்கும்.

நகைகள், திருமண மண்டபத்தின் வாடகை, உணவு மற்றும் பரிசுப் பொருட்களுக்கான செலவுகள் உள்பட மொத்தமாக இந்த நாட்களில் குறைந்த பட்சம் ரூ. 12 முதல் 15 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கும் என்றார்.

சந்தேகத்திற்கு இடமின்றி இது மணமகளின் குடும்பத்திற்கு மிகப்பெரிய பொருளாதாரச் சுமையாகும். சிலர் தங்கள் வாழ்நாள் சேமிப்பை செலவிடுவார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கடனில் மூழ்கி இருப்பார்கள்.

இங்கே நாம் செலவு செய்யக்கூடியவர்களைப் பற்றி பேசவில்லை. பிரச்சினை என்னவென்றால், அத்தகைய செல்வந்தர்கள் ஒரு அளவுகோலை நிர்ணயிப்பார்கள். அதை வாங்க முடியாதவர்களும் பின்பற்ற வேண்டும் என்று சமூகம் விரும்புகிறது.

இதில் மோசமாக பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம், கீழ் நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழை பிராமணர்கள். ஏழை பிராமணக் குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக பல வருடங்களாக போராடுவதை நான் தனிப்பட்ட முறையில் அறிவேன்.

நன்றாக செயல்படுபவர்கள் தங்கள் ஈகோவைக் கைவிட தயாராக இருந்தால் அவர்கள் தமிழ்நாட்டில் மணப்பெண்களைக் காணலாம் என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன் ஐயங்கார் சமூகத்தில் தென்கலை, வடகலை பிரிவினருக்கு இடையே திருமணங்கள் நடக்காமல் இருந்தது. இன்று அதுவும் நடக்கிறது. சங்கம் எடுத்துள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் சிலர் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்...திருவண்ணாமலையில் மகா தீப கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது

Tags:    

Similar News