செய்திகள்
வேலூரில் மழை- பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 9 மணி முதல் மழை பெய்தது. தொடர்ந்து இன்று காலையிலும் மழை பெய்துவருகிறது. பரவலான மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. காட்பாடி வி.ஜி.ராவ் நகர் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.
மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. குடியாத்தம், பேர்ணாம்பட்டு. பள்ளிக்கொண்டா, கே.வி.குப்பம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்திலும் இன்று காலை மழை பெய்தது. அரக்கோணம், காவேரிப்பாக்கம், வாலாஜா, சோளிங்கர், ஆற்காடு, ராணிப்பேட்டையிலும் தொடர்ந்து மழை பெய்துவருகிறது.
பனப்பாக்கம் நெமிலி பகுதிகளில் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் சேதமடைந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூர் பகுதிகளில் இன்று காலை தொடர்ந்து மழை பெய்தது. ஆம்பூரில் ஏரி தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்ததால் பேர்ணாம்பட்டு சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.
திருவண்ணாலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், கண்ணமங்கல், செங்கம், கீழ்பென்னத்தூர், வேட்டவலம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாவட்டம் முழுவதும் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. செய்யாறு, கண்ணமங்கலத்தில் மழை வெள்ளம் விளைநிலங்களுக்குள் புகுந்ததால் பயிர்கள் சேதமடைந்துள்ளது. தாழ்வான இடங்களிலுள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.