செய்திகள்
தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு நீண்ட வரிசையில் காத்திருந்த விவசாயிகளை படத்தில் காணலாம்.

பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற நீண்ட வரிசையில் காத்திருந்த விவசாயிகள்

Published On 2021-11-17 14:06 GMT   |   Update On 2021-11-17 14:06 GMT
மன்னார்குடி தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கி முன்பு பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை பெற நீண்ட வரிசையில் விவசாயிகள் காத்து இருந்தனர்.
மன்னார்குடி:

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2020-2021-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு தற்போது பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டுகளில் பயிர் காப்பீடு செய்துள்ள மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் கடந்த ஒரு வாரமாக மன்னார்குடியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் சென்று இழப்பீட்டு தொகையை பெற்று செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு 150 நபர்கள் இழப்பீடு பெறுவதற்கான டோக்கன்கள் வங்கியில் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை 6 மணி முதல் பயிர் காப்பீடு இழப்பீட்டை பெறுவதற்காக விவசாயிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாள் ஒன்றுக்கு 300 டோக்கன் வரை வழங்க வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடந்த ஆண்டுகளில் பயிர் காப்பீட்டு தொகை கிராம பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மன்னார்குடியில் உள்ள தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டுமே பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டதால் விவசாயிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Tags:    

Similar News