செய்திகள்
பெரிய மார்க்கெட்டில் ஒரு காய்கறி கடையில் விற்பனை நடந்தபோது எடுத்த படம்.

புதுச்சேரியில் வரத்து குறைவால் ஒரு கிலோ கத்தரிக்காய் விலை ரூ.130- இல்லத்தரசிகள் அதிர்ச்சி

Published On 2021-11-17 02:47 GMT   |   Update On 2021-11-17 02:47 GMT
சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.
புதுச்சேரி:

புதுச்சேரி மார்க்கெட்டுகளில் உள்ளூர் காய்கறிகள் தவிர தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, மராட்டிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் இறக்குமதி செய்யப்படுகிறது.

தற்போது பெய்து வரும் பருவமழையால் தமிழகம், கர்நாடகத்தில் காய்கறி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.

அதன்படி புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் நேற்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை (பழைய விலை அடைப்புக்குறிக்குள்) வருமாறு:-

ஒரு கிலோ கத்தரிக்காய் -ரூ.120 முதல் ரூ.130 (ரூ.60)

பெரிய வெங்காயம் (பல்லாரி)-ரூ.40 (ரூ.35)

கேரட், பீன்ஸ் தலா ரூ.60 (ரூ.50)

இதுதவிர உருளைக்கிழங்கு ரூ.40, தக்காளி ரூ.50, முட்டைக்கோஸ் ரூ.22, சவ்சவ் ரூ.28 என விற்பனை செய்யப்பட்டது. இந்த காய்களுக்கு கடந்த வாரம் விற்கப்பட்ட விலையே தற்போதும் நீடித்தது.

சைவ சமையலில் முக்கிய இடம் வகிக்கும் கத்தரிக்காய் மட்டும் விலை உச்சத்தில் இருப்பதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சமையலில் கத்தரிக்காயை சேர்ப்பதை தவிர்த்தனர்.

கார்த்திகை மாதம் அய்யப்ப சாமி சீசன் தொடங்கி இருப்பதால் காய்கறிகளின் விலை இன்னும் ஒரு மாதத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News